உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழிலாளர்களுக்கு நிவாரணம் ஏ.ஐ.டி.யூ.சி., வலியுறுத்தல்

தொழிலாளர்களுக்கு நிவாரணம் ஏ.ஐ.டி.யூ.சி., வலியுறுத்தல்

புதுச்சேரி: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என, ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக அமைப்புசாரா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ, லோடு கேரியர் ஓட்டுநர்கள், சுமை துாக்கும் தொழிலாளர்கள், சாலையோரம் கடை வைத்துள்ளவர்கள், கடைகளில் வேலை செய்பவர்கள், சலவையாளர்கள், முடி திருத்துவோர், வீட்டு வேலை, தையல் வேலை, சமையல் வேலை செய்பவர்கள், மீன்பிடி தொழிலாளர்கள் பாதித்துள்ளனர்.வருமானம் இன்றி கஷ்டப்படுகின்றனர். புதுச்சேரி அரசு மழைக்கால நிவாரணமாக, அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை