அட்சய பாத்ரா - பி.டபிள்யூ.எல்.பி.ஜி., இந்தியா நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
புதுச்சேரி: அட்சய பாத்ரா அறக்கட்டளைக்கும், பி.டபிள்யூ எல்.பி.ஜி., இந்தியா நிறுவனத்திற்கும் இடையே, பள்ளி மாணவர்களுக்கான துாய சக்தி மற்றும் ஊட்டசத்து மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம், 'அட்சய பாத்ரா' அறக்கட்டளை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அட்சய பாத்ரா அறக்கட்டளையின் நிறுவனத்திற்கும், பி.டபிள்யூ.எல்.பி.ஜி., இந்தியா நிறுவனத்திற்கும் இடையே, பள்ளி மாணவர்களுக்கான துாய சக்தி மற்றும் ஊட்டசத்து மேம்பாட்டிற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுச்சேரியில் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அட்சயா பாத்ரா அறக்கட்டளை நிதியியல் தலைவர் பாலாஜி முஞ்சூர்பேட், பி.டபிள்யூ எல்பிஜி இந்தியா நிறுவன இயக்குனர் கேப்டன் கவுரவ பாட்டியா கையெழுத்திட்டனர். அதன்படி, அட்சய பாத்திரம் அறக்கட்டளையின் புதுச்சேரி மைய சமையல் கூடத்தில், எல்.பி.ஜி., சக்தியால் இயங்கும் மூன்று குழம்பு தயாரிக்கும் இயந்திரம், (ஒவ்வொன்றும் 500 லிட்டர் கொள்ளளவு) மற்றும் உபகரணங்களை, பிடபிள்யூ எல்பிஜி இந்தியா நிறுவனம் நிறுவியுள்ளது. இந்த சமையல் மூலமாக, பிரதமர் போஷண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயிலும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு தினமும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக, சமைக்கும் திறனை மேம்படுத்தி, சுகாதாரத் தரங்களை உயர்த்தி, உணவு தயாரிப்பை மேலும் திறமையாக செய்திட முடியும்.