மேலும் செய்திகள்
திறமையை வளர்க்க 'செஸ் பார்க்'
20-Dec-2024
புதுச்சேரி: புதுச்சேரி அமலோற்பவம் ஸ்கூல் ஆப் ஸ்போர்ட்சில் பயிற்சி பெற்று வரும் 6 வயது சிறுவன் திவேஷ் மிலன், இளம் சதுரங்க விளையாட்டு வீரராக தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.அமலோற்பவம் ஸ்கூல் ஆப் ஸ்போர்ட்ஸ் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. கல்வி வளர்ச்சியுடன் விளையாட்டுத் துறையிலும் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தென்னாற்காடு மாவட்டத்திலேயே 'முதல் ஸ்போர்ட்ஸ் ஸ்கூல்' ஆக இயங்கி வருகிறது.இதன் தலைமை பயிற்றுநராக சர்வதேச இறகுப்பந்து பயிற்சியாளர் புல்லெலா கோபிச்சந்துடன், இணைந்து சர்வதேச டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல், சர்வதேச சதுரங்க வீரர் ரமேஷ் ஆகியோர் பயிற்றுநர்களாக உள்ளனர்.இவர்களின் வழிகாட்டுதலில், சதுரங்கப் பிரிவில் 6 வயது சிறுவன் திவேஷ் மிலன் நுட்பமான அறிவாற்றலால், தேசிய அளவிலான தரவரிசை பட்டியலில் மூன்றாம் இடமும், புதுச்சேரி அளவில் முதலிடம் பெற்றார். இந்த மைல்கல்லை எட்டிய புதுச்சேரியின் முதல் இளம் சதுரங்க வீரர் என்ற புதிய சாதனையையும் இவர் படைத்திருக்கிறார்.அவரை, அமலோற்பவம் ஸ்கூல் ஆப் ஸ்போர்ட்ஸ் நிறுவனரும், முதுநிலை முதல்வர் லுார்துசாமி பாராட்டி, 4 கிராம் வெள்ளி காசு பரிசாக வழங்கினார்.
20-Dec-2024