ராஜிவ் சிக்னலில் சிக்கிய ஆம்புலன்ஸ்
புதுச்சேரி: ராஜிவ் சிக்னலில் ஏற்பட்ட டிராபிக்ஜாமில் சிக்கி தவித்தஆம்புலன்ஸ் பொதுமக்கள் உதவியால் மீண்டு வெளியே வந்தது.புதுச்சேரியில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்திரா சிக்னல் விளக்குகள் பழுதாகி கிடப்பதாலும், ராஜிவ் சிக்னலில் வி.ஐ.பி.,க்கள் வருகையால் தினசரி டிராபிக் ஜாம் ஏற்படுகிறது.புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகள் நுழையும் முக்கிய பகுதியான ராஜிவ் சிக்னலில் ஏற்படும் கடும் டிராபிக் ஜாம், மாநிலம் குறித்து தவறான தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் நேற்று மதியம் 3:30 மணிக்கு, ராஜிவ் சிக்னல்நுாறடிச்சாலையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது, ஜிப்மர் நோக்கி வந்த மகாத்மா காந்தி மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஒன்று டிராபிக் ஜாமில் சிக்கிக் கொண்டது.சுண்டல் விற்பனை செய்யும் தொழிலாளி ஒருவர் வாகனங்கள் மத்தியில் சிக்கிய ஆம்புலன்ஸ்சுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தார். ஆனால் அக்கார்டு ஓட்டல் அருகே சென்றபோது மீண்டும் டிராபிக்கில் சிக்கியது. 10 நிமிடத்திற்கு மேலாக இந்த போராட்டம் நடந்தது.டிராபிக் ஒழுங்குப்படுத்தி கொண்டிருந்த ஒரு கான்ஸ்டபிளுக்கு ஆம்புலன்ஸ் சிக்கி இருப்பது தெரியவில்லை. காரில் சென்ற ஒரு நபர் காரை சிக்னலில் நிறுத்தி கான்ஸ்டபிளிடம் ஆம்புலன்ஸ் சிக்கியுள்ள விரபத்தை கூறினார்.அதன் பின்னரே மற்ற சாலைகளில் வந்த வாகனங்களை நிறுத்தி, அக்கார்டு பிரிலெப்ட் சாலை திறக்கப்பட்டு ஆம்புலன்ஸ்சுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.