மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத நபர் சாவு
20-Jan-2025
பாகூர்: புதுச்சேரி-கடலூர் சாலை, நோணாங்குப்பம் மேம்பாலத்தில், கடந்த 6ம் தேதி, 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் நடந்து சென்றார். அப்போது, ஹீரோபேஷன் ப்ரோ மோட்டார் சைக்கிள், அவர் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். பொது மக்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு,சிகிச்சை பலனின்றி கடந்த 13ம் தேதி அவர் உயிரிழந்தார்.இது குறித்து, கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து,விபத்தில் உயிரிழந்த முதியவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். தகவல் தெரிந்தால், 0413 -- 2611000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
20-Jan-2025