உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூதாட்டியை தாக்கி மூக்குத்தி பறிப்பு கரிக்கலாம்பாக்கம் அருகே துணிகரம்

மூதாட்டியை தாக்கி மூக்குத்தி பறிப்பு கரிக்கலாம்பாக்கம் அருகே துணிகரம்

வில்லியனுார்: கரிக்கலாம்பாக்கம் அருகே மூதாட்டியை தாக்கி மூக்குத்தி பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கரிக்கலாம்பாக்கம் அருகே உள்ள தமிழக பகுதியான கடலூர் மாவட்டம் கீழ்குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை. இவரது தாயார் அழகம்மாள்,70; நேற்று முன்தினம் காலையில் அழகம்மாள் உள்ளிட்ட அதேபகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் நெல் பயிரில் களை எடுத்துள்ளனர். சாப்பிட மதியம் வீட்டிற்கு சென்றனர்.மாலை நேரகளைஎடுப்பதற்காக அழகம்மாள் மட்டும் பாகூர் மெயின் ரோட்டில் உள்ள விவசாய நிலம் பகுதியில் மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக பைக்கிள் வந்த சுமார் 25 வயதுடைய மர்ம நபர் ஒருவர் , அழகம்மாளிடம் ஏதோ பேசுவது போல அருகே சென்றுள்ளார். தனியாக இருந்த அழகம்மாளை சராமறியாக தாக்கி, அவர் அணிந்திருந்த அரை கிராம் மூக்குத்தியை பறித்துக்கொண்டார். வலி தாங்க முடியாமல் அழகம்மாள் அலறியது கேட்டு அவ்வழியாக வந்தவர்கள் மர்ம நபரை விரட்டியபோது பைக்கை அங்கேயை போட்டு விட்டு தப்பியோடினார்.தலையில் படுகாயமடைந்த அழகம்மாளை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து பைக்கை பறிமுதல் செய்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை