| ADDED : மார் 18, 2024 06:16 AM
புதுச்சேரி, : சின்ன சுப்புராயப்பிள்ளை வீதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, தீர்த்தவாரி நடந்தது.சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ளது. 47ம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவை, கடந்த 8ம் தேதி துவங்கியது. அதனை தொடர்ந்து, 9ம் தேதியில் இருந்து, அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும், தொடர்ந்து தினம் அம்மன் வீதியுலா நடந்தது. 14ம் தேதி தேர் பவனி மற்றும் மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.அதனை அடுத்து, நேற்று கோவிலில் இருந்து அம்மன் புறப்பட்டு, முக்கிய வீதிகளில் வழியாக சென்று, காந்தி வீதியில் உள்ள வேதபுரிஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் தீர்த்தவாரி நடந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் பலர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, வரும் 24ம் தேதி, கோவலில், ஊஞ்சல் உற்வசமும், மறுநாள் 25ம் தேதி காலை 6:30 மகா அபிேஷகம், மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்கராத்துடன், தீபாரதனை நடக்கிறது.நிகழ்ச்சி, ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.