உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியில் ஆண்டு விழா

மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியில் ஆண்டு விழா

புதுச்சேரி, : புதுச்சேரி, மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியின் ஆண்டு விழா கலையரங்கில் நடந்தது.விழாவை மணக்குள விநாயகர் கல்வி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் துவக்கி வைத்தார். செயலாளர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தார்.பொருளாளர் ராஜராஜன், மருத்துவ கல்லுாரி இயக்குனர் ராஜகோவிந்தன், துணை இயக்குனர் காக்னே, டீன் (அகாடமிக்) கார்த்திகேயன், டீன் (ஆராய்ச்சி) சஞ்ஜய், மருத்துவ கண்காணிப்பாளர்பிரகாஷ், பதிவாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியின் துணை முதல்வர் நர்மதா வரவேற்றார். செவிலியர் கல்லுாரியின் முதல்வர் முத்தமிழ்செல்வி, ஆண்டு அறிக்கை வாசித்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் சிறப்புரை ஆற்றினார்.விழாவையொட்டி, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பேராசிரியர் ஆயி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ