உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி ; கலெக்டர் ஆய்வு

அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி ; கலெக்டர் ஆய்வு

புதுச்சேரி : புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொதுப்பணித் துறை மூலம் லாம்பேர்ட் சரவணன் நகரில் 128 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள், ஸ்மார்ட் சிட்டி துறையின் மூலம் திப்ராயப்பேட்டையில் 60 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளை கலெக்டர் குலோத்துங்கன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கட்டுமான பணியின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அப்பகுதியில் நடந்து வரும் சாலை அமைக்கும் பணிகள், லாம்பேர்ட் சரவணன் நகரில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் நடந்து வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளையும் கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை