வேட்டி, சேலை பணத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
புதுச்சேரி: பொங்கல் பண்டிகை முன்னிட்டு, ஆதிதிராவிடர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவதற்கு பதிலாக நிதி பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து, ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; புதுச்சேரி ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடும்ப உறுப்பினர்களுக்கு இலவச வேட்டி, வேலை வழங்குவதற்கு பதிலாக பணம் உதவி ஆண்டு தோறும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. அதையடுத்து, வரும் 14.01.2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதுவரை பயன்பெறாத மற்றும் 18 வயது பூர்த்தி அடைந்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் குடும்பத்தினர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை அணுகி, விண்ணப்பங்களை பெற்று, வரும் 30ம் தேதிக்குள், பிறந்த பதிவு, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், ஜாதி மற்றும் வருமான சான்றிதழ் ஆகிய நகல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.