சாலையோர வியாபாரிகளுக்கு பாராட்டு விழா
புதுச்சேரி: பிரதமரின் ஸ்வானதி மகோத்சவ் திட்டத்தில் 2,961 பயனடைந்த சாலையோர வியாபாரிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. உழவர்கரை நகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு பாராட்டு விழா ரெட்டியார்பாளையம் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. கொரோனா காலத்திற்கு பிறகு மூலதனம் இல்லாமல் இருந்த சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரின் ஸ்வானதி மகோத்சவ் திட்டத்தில் பிணையில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 15 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், முதல் தவணையாக 1,715 நபர்களுக்கும், இரண்டாவது தவணையாக 940 நபர்களுக்கும், மூன்றாவது தவணையாக 306 நபர்கள் என, மொத்தம் 2,961 நபர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு விருந்தினராக நாராயணசாமி எம்.எல்.ஏ., பயனாளிகளை பாராட்டி, ஆணையை வழங்கினார். உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு உட்பட பலர் உடனிருந்தனர்.