உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சனி கோள் எதிர்நிலை நிகழ்வு பார்ப்பதற்கு ஏற்பாடு

சனி கோள் எதிர்நிலை நிகழ்வு பார்ப்பதற்கு ஏற்பாடு

புதுச்சேரி: சனி கோளின் எதிர்நிலை நிகழ்வை, தொலை நோக்கி மூலம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் அலுவலக செய்திக்குறிப்பு: வானில், சனிக் கோளின் எதிர்நிலை நிகழ்வு நடக்க உள்ளது. அதையொட்டி, அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் சார்பில், வரும் 21ம் தேதி, லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் தொலை நோக்கி மூலம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை, மாலை 6:30 முதல் இரவு 9:00 மணி வரை காணலாம். இந்த நிகழ்வு பற்றி, இயற்பியல் துறை பேராசிரியர் மதிவாணன் விளக்கம் அளிக்க உள்ளார். இந்த நிகழ்வை, மாணவர்கள், பொதுமக்கள் பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை