மேலும் செய்திகள்
பொதுமக்களிடம் தகராறு: வாலிபர் கைது
26-Oct-2024
புதுச்சேரி:: பொது இடத்தில் தகராறு செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.மேட்டுப்பாளையம் வி.எம். கார்டன் பகுதியில் வாலிபர் ஒருவர் அவ்வழியாக செல்பவர்களிடம் தகராறு செய்வதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.அவர், வானுாரை சேர்ந்த கார்த்திகேயன், 32; என தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.அதே போல, முதலியார்பேட்டை நுாறடி சாலையில், மது போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்த, அரியாங்குப்பத்தை சேர்ந்த பிரவீன், 27, என்பவர் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
26-Oct-2024