உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதையில் தகராறு வாலிபர் கைது

போதையில் தகராறு வாலிபர் கைது

திருக்கனுார்: குமாரப்பாளையத்தில் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது, குமாரப்பாளையம் மூன்றுமுனை சாலை சந்திப்பு அருகே குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக தகராறு செய்துகொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.தமிழகப் பகுதியான வி.நெற்குணம், திருவள்ளூவர் வீதியை சேர்ந்த முத்தழகன், 34; என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை