மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
4 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
4 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
4 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
4 hour(s) ago
பாகூர் : ஆசிய அளவிலான சிலம்பம் போட்டியில், புதுச்சேரி வீரர்கள் ஒரு தங்கம், 8 வெள்ளி உள்ளிட்ட 20 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.உலக சிலம்பம் சம்மேளனம் மற்றும் அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் சார்பில், 5வது ஆசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நாகர்கோவிலில் நடத்தது.கடந்த மாதம் 26 முதல் 29ம் தேதி வரை நடந்த இப்போட்டியில், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்டநாடுகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்ேகற்றனர்.குத்துவரிசை, அலங்கார வீச்சு, ஒற்றை கம்பு வீச்சு, இரட்டை கம்பு வீச்சு, வேல்கம்பு வீச்சு, ஒற்றை சுருள் வாள், இரட்டை சுருள் வாள், ஆயுத ஜோடி, நேரடி சண்டை ஆகிய பிரிவுகளில் வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.இந்தியாமுதலிடத்தை பிடித்து, சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. இந்திய அணி சார்பில், புதுச்சேரி சிலம்பம் மற்றும் அடிமுறைசங்கம் செயலாளர் அன்பு நிலவன் தலைமையில் பங்கேற்ற வீரர்கள் அலெக்ஸ் பிராங்க்ளின், ஹேமந்த்ராஜ், சாந்தனு, இஷாந்த் ராம்ஜி, இளமாறன், உதயகுமார், ஆரியகுமார், வீகன், கிஷோர், நன்னன் ஆகியோர் வெற்றி பெற்று, ஒரு தங்கம், 8 வெள்ளி,11 வெண்கலம் என, 20பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago