ஆசிய கயிறு இழுக்கும் போட்டி : புதுச்சேரி வீரர்கள் சாதனை
புதுச்சேரி: ஆசிய அளவில் நடந்த, கயிறு இழுக்கும் போட்டியில், சாதனை படைத்த, புதுச்சேரி வீரர்களை, சபாநாயகர் செல்வம் பாராடினார். ஆசிய அளவிலான கயிறு இழுக்கும் போட்டி, மலேசியா நாட்டில் நடந்தது. இந்திய அணி சார்பில், புதுச்சேரியை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அதில், புதுச்சேரியை சேர்ந்த வீரர் குரு பிரசாத் தங்கப்பதக்கம் வென்றார். இந்த போட்டியில், பங்கேற்ற வெங்கடேசன், அர்ஜூன்,பிரசாந்த், ஜெயகுமாரி ஆகிய 4 பேரும் நான்காம் இடம் பிடித்து சாதனை படைத்தனர். சாதனை பெற்ற வீரர்கள், நேற்று சபாநாயகர் செல்வத்தை, அவரது அலுவலகத்தில், சந்தித்தனர். அவர்களை சபாநாயகர் பாராட்டி வாழ்த்தினார். அப்போது, பயிற்சியாளர், பெற்றோர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.