உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பார் கேஷியர் மீது தாக்குதல்

பார் கேஷியர் மீது தாக்குதல்

புதுச்சேரி: பைக்கில் சென்ற பார் கேஷியரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.கனகசெட்டிக்குளம் முத்தாலம்மன் நகரைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் 52, இவர் அதே பகுதியில் உள்ள பாரில் கேஷியராக உள்ளார். இவர் கடந்த 13ம் தேதி மதியம் பைக்கில் காமராஜர் தெருவில் சென்றபோது, அவரது பின்னால் காரில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த தனசேகர் என்பவர் ஏன் ஓரமாக செல்ல மாட்டியா என கேட்டு முத்துக்கிருஷ்ணனை தரக்குறைவாக பேசி தாக்கினார். பலத்த காயமடைந்த முத்துக்கிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காலாப்பட்டு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை