மேலும் செய்திகள்
இறந்தவர்கள் குறித்து போலீஸ் விசாரணை
03-Sep-2024
புதுச்சேரி : மின் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில், வீட்டு உரிமையாளரை தாக்கிய குடியிருந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திப்புராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன் மனைவி சாமுண்டீஸ்வரி, 40; இவரது வீட்டில், கோகுல் என்பவர் குடியிருந்து வருகிறார். வீட்டு உரிமையாளர் மின் கட்டணம் குறித்து, இவர்களுக்கிடையே நேற்று பிரச்னை ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த, கோகுல், உரிமையாளர் சாமுண்டீஸ்வரியை அவதுாராக பேசி தாக்கினார்.இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
03-Sep-2024