உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 25ல் சட்டசபை முற்றுகை இந்திய கம்யூ., அறிவிப்பு இந்திய கம்யூ., அறிவிப்பு

25ல் சட்டசபை முற்றுகை இந்திய கம்யூ., அறிவிப்பு இந்திய கம்யூ., அறிவிப்பு

புதுச்சேரி : மதுபான தொழிற்சாலை அனுமதியை கண்டித்து வரும் 25ம் தேதி சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என, இந்திய கம்யூ., தெரிவித்துள்ளது. இது குறித்து மாநில செயலாளர் சலீம் கூறியதாவது;கடந்த எம்.பி., தேர்தலில் என்.ஆர்.காங்., கூட்டணி தோல்வி அடைந்ததால், பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள், சலுகைகள் இடம் பெறும் என மக்கள் எதிர்பார்த்தனர். எதிர்பார்ப்பு கானல் நீராகிவிட்டது.புதிய ஜம்மு, காஷ்மீர் யூனியன் நிதி கமிஷனில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், புதுச்சேரியை நிதி கமிஷனில் சேர்க்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில், வேன் மூலம் அரிசி விநியோகம் செய்யப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு, மக்களை அவமதிக்கும் செயல்.புதிய மதுபான ஆலைகளால் அரசுக்கு ரூ.500 கோடி வருமானம், 5 ஆயிரம் பெண்களுக்கு வேலை கிடைக்கும் என்கிறார். இதனால் வேலை வாய்ப்புகள் உருவாகாது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி மது ஆலை அனுமதிக்கு ரூ. 15 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறார். இதற்கு அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. மதுபான ஆலை அனுமதி, பட்ஜெட்டை கண்டித்து இந்திய கம்யூ., மா.கம்யூ., கம்யூ., எம்.எல். ஆகிய கட்சிகள் சார்பில் வரும் 25ம் தேதி சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை