சங்க நிர்வாகிகள் தேர்வு
புதுச்சேரி: பொதுப்பணித்துறை ஊழியர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.புதுச்சேரி பொதுப்பணித்துறை ஊழியர்களின் கூட்டுறவு சங்கம், அடுத்த ஆண்டு 1ம் தேதி முதல், 2027ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை நிர்வகிக்க, சங்க அலுவலகத்தில், நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடந்தது.அதில், தலைவராக இளங்கோ, துணைத் தலைவராக வீரபுத்திரன், பொருளாளராக சரவணன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேலும், அண்ணாமலை, கருணாகரன், செந்தில்வேலு, இளங்கோ அரசன், பச்சையப்பன், அருள்முத்து ஆகியோர் நிர்வாகக்குழுவின், இயக்குநர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.