உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் பல்கலையில் ஏ.டி.சி., சர்வதேச மாநாடு

புதுச்சேரியில் பல்கலையில் ஏ.டி.சி., சர்வதேச மாநாடு

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழக சுப்ரமணிய பாரதி தமிழ் மொழி மற்றும் இலக்கியப் பள்ளி, ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், அமெரிக்க தமிழர் செயல் குழு சார்பில் மூன்றாவது ஏ.டி.சி.(அனலாக்-டு-டிஜிட்டல்)இரண்டு நாள் சர்வதேச மாநாடு நடந்தது. சர்வதேச இணை ஒருங்கிணைப்பாளர் முருகையன் தலைமை தாங்கினார். சுப்ரமணியபாரதி தமிழ் மொழி மற்றும் இலக்கியப் பள்ளித் தலைவர் கருணாநிதி வரவேற்றார். சர்வதேச ஒருங்கிணைப்பாளர் பாஞ் ராமலிங்கம் மாநாட்டின் நோக்கவுரையாற்றினார். தமிழ்சங்கத் தலைவர் முத்து, பள்ளித் தலைவர் சுடலைமுத்து, தமிழர் புலம்பெயர் அமைப்புகளின் இந்திய ஒருங்கிணைப்பாளர் கதிரவன், இந்துப் போராட்டக் குழு சர்வதேசத் தலைவர் அருண் உபாத்யாய் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கலாச்சாரம் மற்றும் கலாச்சாரத் தொடர்புகள் இயக்குநர் கிளிமென்ட் சாகயராஜ லுார்து ,மொரீஷியா சட்டவியலாளர் பொனம்பலம் ஆகியோர் பல்வேறு தலைப்பில் பேசினர். மாநாட்டின் கட்டுரைகளின் சுருக்க நுாலை சபாநாயகர் செல்வம் வெளியிட, முதல் பிரதியை ஆசிய ஆய்வுகள் நிறுவன இயக்குநர் ஜான் சாமுவேல் பெற்றுக்கொண்டார்.இளம் மற்றும் மூத்த அறிஞர்கள் பலரும் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினர். ஏ.டி.சி தலைவர் கிருஷ்ணப்பிள்ளை தலைமையில் இடைமுக அமர்வு நடந்தது. அதில், தமிழ்ப் பண்பாட்டு அடையாளக் காப்பு, பண்பாட்டு நீதி மேம்பாடு, மனித உரிமைப் பாதுகாப்பு, உலகத் தமிழர் ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தி 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்கலைக்கழக பதிவாளர் ராஜ்நீஷ் பூதானி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.பேராசிரியர் தரணிக்கரசு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ