உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆட்டோ ஸ்டாண்டாக மாறிய நிழற்குடை ஜிப்மர் மருத்துவமனையில் அட்டூழியம்

ஆட்டோ ஸ்டாண்டாக மாறிய நிழற்குடை ஜிப்மர் மருத்துவமனையில் அட்டூழியம்

ஜிப்மர் நுழைவு வாயில் அருகே உள்ள நிழற் குடையை ஆக்கிரமித்து ஆட்டோ ஸ்டாண்டாக மாறியுள்ளது.கோரிமேடு ஜிப்மர் நுழைவு வாயில் அருகே நோயாளிகள், அவர்களது உறவினர்கள் காத்திருந்து பஸ் ஏறுவதற்காக நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. ஆனால், நிழல் குடை பயணிகளுக்கு எந்த விதத்திலும் உதவவில்லை.பயணிகளுக்கான நிழற்குடை முழுதும் ஆக்கிரமிக்கப்பட்டு ஆட்டோ ஸ்டாண்டாக மாறியுள்ளது. ஆட்டோக்கள் மட்டுமே நிறுத்தப்படுகிறது. வேறு வழியின்றி பொதுமக்கள் சாலையில் ஆபத்தான முறையில் காத்திருந்து பஸ் ஏறி செல்கின்றனர்.நிழற்குடைகள் உள்ள ஆட்டோக்களை போக்குவரத்து போலீசார் ஒவ்வொரு முறையும் அகற்றுவதும், அதன் பிறகு சில நாட்களில் பயணிகளை துரத்திவிட்டு நிழல் குடையை மீண்டும் ஆட்டோ ஸ்டாண்டாக மாற்றி அட்டூழியம் செய்து வருகின்றனர்.அதிகாரிகள் பல முறை எச்சரித்த போதிலும், அதனை பொருட்டாகவே இங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் நினைக்கவில்லை. பயணிகளுக்கான நிழற் குடையை ஆட்டோ ஸ்டாண்டாக மாற்றியுள்ளது பொதுமக்கள், நோயாளிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆட்டோக்களை வேறு இடத்திற்கு மாற்றி, பயணியர் நிழற்குடையை மீட்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை