சிறுவன் மீது தாக்குதல்
புதுச்சேரி: பூமியான்பேட்டை விஜயலட்சுமி மகன் ஆகாஸ், 17. பூமியா ன் பேட்டை பூங்காவிற்கு கடந்த 23ம் தேதி, சென்றார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த வருண், உன் நண்பரை சமாதானம் செய்ய வேண்டும் கூப்பிடு என்றார். ஆகாஸ் மறுத்த தால், ஆத்திரமடைந்த வருண், அவரை தாக்கினார். ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, வருணை தேடி வருகின்றனர்.