உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதியவர் மீது தாக்குதல்

முதியவர் மீது தாக்குதல்

புதுச்சேரி : முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். மேட்டுப்பாளையம், வழுதாவூர் சாலையைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 70. இவர், அதே பகுதியில் பாஸ்ட் புட், பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலை 6:30 மணியளவில், இவரது கடை அருகில் கடை நடத்தும் ராஜேந்திரன், 45, என்பவர், ராதாகிருஷ்ணனை தாக்கி, அவரது பழக்கடை வண்டியை வாய்காலில் தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்தார். ராதாகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில், ராஜேந்திரன் மீது மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை