உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீஸ் அதிகாரியின் நண்பர்கள் மீது தாக்குதல் எதிரொலி

போலீஸ் அதிகாரியின் நண்பர்கள் மீது தாக்குதல் எதிரொலி

புதுச்சேரி: போலீஸ் உயர் அதிகாரி நண்பர்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவம் எதிரொலியால், போலீசார் நள்ளிரவில் திடீர் ரெய்டு நடத்தி டிபன் கடைகளை மூடியதுடன், குடிபோதை ஆசாமிகளை விரட்டியடித்தனர். புதுச்சேரி போலீஸ் ஐ.பி.எஸ்., உயர் அதிகாரியின் குடும்ப நண்பர்கள் கடந்த 1ம் தேதி இரவு காமராஜர் சாலை, ராஜா தியேட்டர் அருகே தள்ளுவண்டி டிபன் கடையில் உணவு சாப்பிட்டனர். உணவு தரமற்றதாக இருந்தது. அதனை வீடியோ பதிவு செய்தனர். அப்போது, டிபன் கடை நடத்துபவருக்கு ஆதரவாக, கொலை மற்றும் அடிதடி வழக்கில் உள்ள நபர் எதற்காக வீடியோ எடுக்கிறாய் என கேட்டார். அப்போது, இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. டிபன் கடை உரிமையாளர் நண்பர்கள் போலீஸ் அதிகாரியின் நண்பர்களை தாக்கினர். இந்த தகவல் போலீஸ்அதிகாரிக்கு சென்றது. சிறப்பு அதிரடிப்படை போலீஸ் மூலம் தாக்குதல் நடத்தியவர்கள் தேடும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், சிறப்பு அதிரடிப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் இணைந்து, நேற்று முன்தினம் இரவு அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட நகர பகுதி மதுபான பார்களில் இரவு 11:00 மணி தாண்டி மது அருந்தி கொண்டிருந்தவர்களை போலீசார் விரட்டியடித்தனர். நள்ளிரவு 12:00 மணிக்கு பிறகு திறந்திருந்த டிபன் கடைகளையும் மூடினர். நகர வீதிகளில் மதுபோதையில் வலம் வந்த ஆசாமிகளுக்கும் கவனிப்பு நடந்தது. போலீசார் கூறுகையில்; புத்தாண்டு கொண்டாட்டத்தின் போதே, நள்ளிரவு 11:00 மணியை தாண்டி மதுபான பாரில் யாரையும் அனுமதிக்க கூடாது. சாலைகளை ஆக்கிரமித்து இரவு டிபன் கடை நடத்த கூடாது என தெரிவித்து இருந்தோம். இதனை பலர் பின்பற்றாததால், ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டது என கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை