உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கேண்டின் உரிமையாளர் மீது தாக்குதல்

கேண்டின் உரிமையாளர் மீது தாக்குதல்

புதுச்சேரி: மதுபான கடையில் கேண்டின் உரிமையாளரை தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.லாஸ்பேட்டை, கிருஷ்ணா நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், 47. இவர், வில்லியனுார் தனியார் பார் ஒன்றில் கேண்டின் நடத்தி வருகிறார். இந்த மதுபான கடைக்கு நேற்று முன்தினம் மாலை வந்த அரும்பார்த்தபுரத்தைச் சேர்ந்த பாலா, 19, என்பவர் வெளியில் இருந்து உணவு எடுத்து வந்து பாரில் அமர்ந்து சாப்பிட்டார்.இதனை தட்டிக்கேட்ட ரமேைஷ பாலா சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.படுகாயமடைந்த ரமேஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வில்லியனுார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து, பாலாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !