மேலும் செய்திகள்
குடும்ப பிரச்னை 2 தரப்பினர் மீது வழக்கு
23-Apr-2025
புதுச்சேரி : பாட்டியை தாக்கியதை தட்டிக்கேட்டவரை பீர் பாட்டிலால் தாக்கியவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சாரம் சக்தி நகரை சேர்ந்தவர் சூர்யா. இவர் தனது பாட்டியை தாக்கினார். அதை, எதிர் வீட்டில் இருந்த இரண்டு பெண்கள் தட்டிக்கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த சூர்யா அவர்களை திட்டி தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த விஜயராகவன் ஏன் பெண்களை தாக்கினாய் என கேட்டார். அதில் ஆத்திரமடைந்த சூரியா என் பாட்டியை நான் அடிப்பேன் நீங்கள் யார் கேட்பது, என கூறி அருகில் இருந்த பீர்பாட்டிலால், விஜயராகவனை தாக்கினார். புகாரின் பேரில், உருளையன்பேட்டைபோலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
23-Apr-2025