மேலும் செய்திகள்
வாலிபரை தாக்கியவர் கைது
23-Sep-2024
பாகூர்: முன்விரோதம் காரணமாக வாலிபர்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த, 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர். பாகூர் அடுத்துள்ள மதிகிருஷ்ணாபுரம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் கட்டுமான பணி தொடர்பாக இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே பிரச்னை உள்ளது. இதில் ஒரு தரப்பை சேர்ந்த கவியரசன் 23; என்பவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களான முத்து, பாஸ்கர் ஆகியோருடன் முள்ளோடையில் டீ குடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி சென்றனர்.அப்போது, அதே பகுதியை சேர்ந்த வீரமுத்து, வீரப்பன், மதிவாணன், விஜயகுமார் ஆகியோர் கோவில் பிரச்னை முன்விரோதம் காரணமாக கவியரசன் மற்றும் அவரது நண்பர்களை வழிமறித்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில், காயமடைந்த 3 பேரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து கவியரசன் அளித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
23-Sep-2024