உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மத்திய அரசு ஊழியரிடம் செயின் பறிக்க முயற்சி

மத்திய அரசு ஊழியரிடம் செயின் பறிக்க முயற்சி

புதுச்சேரி: இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் செயினை பறிக்க முயன்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.முதலியார்பேட்டை இந்திரா நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 51; இவர் சுற்றுலாத்துறையில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி உமா, 46; இவர் புதுச்சேரி அஞ்சலக துறையில், உதவியாளராக பணியாற்றி வருகின்றார். கடந்த 12ம் தேதி உமா வேலை முடித்துக்கொண்டு தனது ஸ்கூட்டியில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். நைனார்மண்டபம் சாலை வழியாக செல்லும் போது, அவருக்கு பின்னால் பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரது, அருகில், வந்து கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து உமா காயமடைந்தார். இதனால் மர்ம நபர்கள் தப்பிச்சென்றனர்.புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை