உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏ.டி.எம்.,ல் திருட முயற்சி

ஏ.டி.எம்.,ல் திருட முயற்சி

காரைக்கால்; காரைக்காலில் ஏடி.எம்., மையத்தில் மர்ம நபர்கள் திருடமுயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காரைக்கால் லெமர் வீதியில் உள்ள தனியார் வங்கி ஏடி.எம்., மையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் சிலர் புகுந்து அங்கிருந்த சி.சி.டி.வி., கேமராவை சேதப்படுத்தினர்.பின், கூர்மையான ஆயுதங்களை கொண்டு பணம் வைக்கும் மிஷனில் இருந்து பணத்தை எடுக்க முயன்றனர். அப்போது அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் மர்மநபர்கள் தப்பிச் சென்றனர்.இதுக்குறித்து தனியார் வங்கி அதிகாரிகள் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் புருேஷத்தமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ