உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாக்குச் சாவடி நிலை அலுவலர் துணையுடன் ஓட்டு திருட்டு முயற்சி : காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் குற்றச்சாட்டு

வாக்குச் சாவடி நிலை அலுவலர் துணையுடன் ஓட்டு திருட்டு முயற்சி : காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரியில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் துணையோடு ஓட்டு திருட்டு முயற்சி நடப்படதாக காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் குற்றச்சாட்டியுள்ளார். அவர், கூறியதாவது; புதுச்சேரி மாநிலத்தில் அதிகாரிகளின் துணையோடு ஓட்டு திருட்டு செய்யும் வேலையை பா.ஜ.,வினர் செய்து வருகின்றனர். லாஸ்பேட்டை தொகுதியில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியின் போது வாக்குச்சாவடி நிலை அலுவலர், என்.ஆர்.காங்., கட்சியின் முகவராக இல்லாதவரை அழைத்து செல்கின்றனர். கேட்டால் தன்னார்வலர்கள் என்கின்றனர். காங்., கட்சி சார்பில், வாக்குச்சாவடி முகவர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம், வாக்குச்சாடி நிலை அலுவலர்கள் எந்த பகுதியில் படிவங்களை வினியோகிக்க செல்கின்றனர் என்ற விவரங்களை கூட தெரிவிப்பதில்லை. ஆனால், படிவங்களை வினியோகிக்க செல்லும் முன்னரே முகவர்களுக்கு தெரிவிப்பது கட்டாயம். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் எந்த பகுதிக்கு செல்கிறோம் என்பதை முகவர்களுக்கு தெரிவிக்காமல் செல்வதால், ஓட்டு திருட்டு செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் நடந்து வருகிறது. இதுதொடர்பான ஆதாரத்தை தலைமை தேர்தல் அதிகாரியை சந்திந்து அளித்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். கடந்த லோக்சபா தேர்தலில் 50 தொகுதிகளில் ஓட்டு திருட்டு நடந்துள்ளது. புதுச்சேரி தொகுதியில் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஆனால் 60 ஆயிரம் ஓட்டுகள் திருடப்பட்டதால் 1 லட்சத்து 36 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற முடிந்தது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை