ஆட்டோ டிரைவர் தற்கொலை
காரைக்கால்: நோயால் அவதிப்பட்ட ஆட்டோ டிரைவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.காரைக்கால் நிரவியை சேர்ந்தவர் ராமு,57; ஆட்டோ டிரைவர். இவருக்கு கவிதா என்ற மனைவியும், இரு மகள்கள் உள்ளனர்.இந்நிலையில் சர்க்கரை நோய் மற்றும் சீறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்த ராமு நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நிரவி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.