மேலும் செய்திகள்
கழிவறை வசதி தேவை
26-Oct-2026
புதுச்சேரி: பள்ளூர் சமுதாய நல வழி மைய பெண் மருத்துவ பிரிவின் கழிவறையை வீடியோ எடுத்து வாட்ஸ் ஆப்பில் பரப்பிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். மாகே பள்ளூர் பகுதியை சேர்ந்தவர் ஜிஜேஷ்குமார்,50; ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 13ம் தேதி பள்ளூர் சமுதாய நலவழி மையத்தில், தனது தாயை சிகிச்சைக்காக சேர்த்தார். அப்போது அங்குள்ள பெண் மருத்துவபிரிவு கழிவறையின் நிலை குறித்து வீடியோ எடுத்து வாட்ஸ்ஆப்பில் பரப்பியுள்ளார். இதைய அறிந்த சமுதாய நலவழிமைய மருத்துவ பொறுப்பாளர் சைபுன்னிசா பள்ளூர் போலீசில் புகார் அளித்தார். அதில், ஜிஜேஷ்குமார், டாக்டர் மற்றும் பணியாளர்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரியின் அனுதியின்றி பெண் மருத்துவ பிரிவின் கழிவறையை வீடியோ எடுத்து வாட்ஸ் ஆப்பில் பரப்பியாதகவும் கூறியிருந்தார். இதையடுத்து ஜிஜேஷ்குமார் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
26-Oct-2026