உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆட்டோ டிரைவர் மாயம்

ஆட்டோ டிரைவர் மாயம்

புதுச்சேரி, : ஆட்டோ டிரைவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.மூலக்குளம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் தணமூர்த்தி, 56; ஆட்டோ டிரைவர்.இவர், மனைவி சந்திரகலா மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இவர், அடிக்கடி வீட்டில் யாருக்கும் தெரிவிக்காமல், வெளியூர் சென்று விட்டு, 5 நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு வருவது வழக்கம்.கடந்த 2ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர், இதுவரையில் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, பல்வேறு இடங்களில் தேடியும் தணமூர்த்தி கிடைக்கவில்லை.இதுகுறித்து அவரது மகன் நவீன்குமார் அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை