மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லுாரி டீனுக்கு விருது வழங்கல்
புதுச்சேரி: மாணவர்களுக்கு கல்வித் துறையில் அளித்த சிறப்பான பங்களிப்புக்காக வாழ்நாள் விருதினை மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லுாரி டீன் ஜெயக்குமாருக்கு வழங்கப்பட்டது. சென்னை குரு கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் சிக் ஷ சன்ஸ்க்ரிடி உதன் ந்யாஸ் சார்பில் சர்வதேச மாநாடு புதுச்சேரியில் நடந்தது. மாநாட்டில், புதுச்சேரி சபாநாயகர் செல்வம் பங்கேற்று, மாணவர் சமூகத்திற்கு கல்வித் துறையில் வழங்கிய பங்களிப்புக்காக மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லுாரியின் டீன் ஜெயகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கினார்.மாநாட்டினை மத்திய தேசிய கல்வி கண்காணிப்பு குழு, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உறுப்பினர் வினோத்,டாக்டர்கள் மகாலட்சுமி புருஷோத்தமன், கந்தவேல் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக நீண்ட ஆண்டுகளாக பாடுபட்டு வரும் ஜெயகுமாரின் சாதனையை பாராட்டி,மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் இயக்குனர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணைச்செயலாளர் வேலாயுதம், முதல்வர் மலர்க்கண் ஆகியோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.