உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கராத்தே மாணவர்களுக்கு கலர் பெல்ட் வழங்கல்

கராத்தே மாணவர்களுக்கு கலர் பெல்ட் வழங்கல்

புதுச்சேரி : புதுச்சேரி செய்கோ காய் கராத்தே சங்கம் சார்பில் கலர் பெல்ட் வழங்கும் விழா பிரசிடென்சி மேல்நிலை எலைட் பள்ளியில் நடந்தது. புதுச்சேரி செய்கோ காய் கராத்தே இன்டர்நேஷனல் அசோசியேஷன் தலைவர் கிறிஸ்டிராஜ், பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி (எலைட்) முதல்வர் ஜெயந்திராணி, பள்ளிச் செயலாளர் கவுதம் ஆகியோர் மாணவர்களுக்கு கலர் பெல்ட் வழங்கினர். விழாவில், பள்ளி துணை முதல்வர் ஜான் பால், பயிற்சியாளர்கள் அருள்ராஜ், திரிசாந்த், தனுஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை செய்கோ காய் கராத்தே பள்ளியின் துணைத் தலைவர் கியோஷி ஞானசேகரன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !