உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விருதுகள் வழங்கும் விழா

விருதுகள் வழங்கும் விழா

புதுச்சேரி: புதுவை தமிழ்சங்கத்தில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமி மற்றும் தமிழ் செம்மல் விருதுகள், வழங்கும் விழா நடந்தது.புதுவை தமிழ் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலர் மோகன்தாசு வரவேற்றார். துணைத் தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக்கரசு, பொருளாளர் அருள்செல்வம், துணை செயலர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முனைவர்கள் விசயராணி, விசாலாட்சி, பூங்குழிலி பெருமாள், சவுந்தரவள்ளி, புவனேஸ்வரி, பிரபா, சுபாசினி ஆகியோர் கவிதை வாசித்தனர். புதுச்சேரி கலை இலக்கிய பெருமன்ற தலைவர் சிவக்குமார் சிறப்புரையாற்றினார். எழுத்தாளர் சிவக்குமாருக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது, முனைவர் பாரதிக்கு தமிழ் செம்மல் விருதும் வழங்கப்பட்டது. உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் தலைவர் அலன் ஆனந்தன் கருத்துரை வழங்கினார். விழாவில் சுரேஷ்குமார், சிவேந்திரன், ஆனந்தராசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கலைமாமணி ராசா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை