| ADDED : மார் 05, 2024 11:54 PM
நெட்டப்பாக்கம் : அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கரியமாணிக்கம் கிராமத்தில் நடந்தது.வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திக்கேசன் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் ராஜவேலு விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.தொடர்ந்து பாலின வன்முறை தொடர்பாக மகளிர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி, சூரமங்கலம் தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் மகளிர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், இன்ஸ்பெக்டர் கீர்திவர்மன், சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அதிகாரிகள் முகந்தி, ஹெலன், வழக்கறிஞர் கிரிஜா ஆகியோர் கருத்துரை வழங்கினர். வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்ரமணியன், வட்டார விரிவாக்க அதிகாரிகள் கார்த்திக்கேயன், வெங்கடபாரதி, இணைப்பு அதிகாரி சாந்தமூர்த்தி, பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.