மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவிலில் 21ல் திருக்கல்யாணம்
15-May-2025
புதுச்சேரி : ராணுவத்தில் சேருவதற்கான (கேரவன் டாக்கீஸ்) சிறப்பு திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தவளக்குப்பத்தில் இன்று நடக்கிறது.கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு:இந்திய ராணுவம் சார்பில் (கேரவன் டாக்கீஸ்) சிறப்பு திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுச்சேரியில், கடந்த 12ம் தேதி துவங்கியது. வரும் 21ம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடக்கிறது.நிகழ்ச்சியில், ராணுவத்தில் சேருவதற்கான வாய்ப்புகள் குறித்தும், இளைஞர்களுக்கு தெரிவித்து ஊக்குவித்தும், அதற்கு வழிகாட்டவும், விளம்பர வேன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.இதன் மூலம் கல்லுாரி மற்றும் கிராமங்களில் இளைஞர்களுக்கு ராணுவத்திற்கு ஆட்சேர்ப்புக்கான பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, தவளக்குப்பம் திவன் மதர் கல்லுாரி மற்றும் ஆறுபடை வீடு மெடிக்கல் கல்லுாரியில் இன்று 14ம் தேதி நடக்கிறது. தொடர்ந்து, நாளை 15ம் தேதி கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் இன்ஜினியரிங் கல்லுாரி மற்றும் செட்டிப்பட்டு, விஜய் கலைக் கல்லுாரியிலும் நடக்கிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
15-May-2025