அரசு தொடக்கப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுச்சேரி, : தட்டாஞ்சாவடி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நி கழ்ச்சிக்கு, வட்டம் 1 பள்ளி துணை ஆய்வாளர் அனிதா தலைமை தாங்கினார். கோரிமேடு மதர் தெரெசா செவிலியர் கல்லுாரி பேராசிரியை நந்தினி, சிவசங்கரி, சித்ரா மற்றும் 4ம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கண், பற்கள், பாதுகாப்பு குறித்து விளக்கினர். தொடர்ந்து மாணவர்களி ன் உடல்நல பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அதிகாரி சுதா கலந்து கொண்டு அடிப்படை சுத்தம் குறித்து மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். தொடர்ந்து மாணவர்களுக்கு சுகாதாரம் தொடர்பாக வில்லுப்பாட்டு, நடனம், நாடகம், பொம் மலாட்டம், கை கழுவதல் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் கீதா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்