உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருபுவனை : புதுச்சேரி மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் பேரவை சார்பில், 100 சதவீதம் ஓட்டளிப்பதே நமது வலிமை என்றவிழிப்புணர்வு நிகழ்ச்சி, மண்ணடிப்பட்டு திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது.சண்முகம் தலைமை தாங்கினார். வினோத் வரவேற்றார். மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், வாஞ்சிலிங்கம் முருகன் ஆகியோர் வாக்களிப்பதன் மூலம் நமது அதிகாரம் பெறுவது மற்றும் மத்திய, மாநில திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினர்.நிகழ்ச்சியில் நமது ஓட்டு, நமது சக்தி, நமது உரிமை 100 சதவீதம் வாக்களிப்பதே நமது வலிமை. நமது ஓட்டு விற்பனைக்கு இல்லை என, அனைவரும் உறுதி மொழியேற்றனர்.பேரவை பொறுப்பாளர்கள் விநாயகமூர்த்தி, முரளிதாஸ், காசிநாதன், திருநாவுக்கரசு, முரலிதாஸ் சந்தோஷ்சிவன், சுதா, கற்பகம், சம்பந்தம்,மணிமாலா, ஜெயமாலதி, ராதிகா உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் இதயதுல்லா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி