மேலும் செய்திகள்
வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
31-Dec-2025
புதுச்சேரி: புதுச்சேரியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். வங்கிகளில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. வாரத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும். காலிபணியிடங்கள் நிரப்ப வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும். தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நாடு முழுவதும் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து, பாரதி பூங்கா அருகே உள்ள யூகோ வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளின் கிளைகளில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். வங்கி ஊழியர்களின் இந்த போராட்டத்தால் பல நுாறு கோடி ரூபாய் பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில், தனியார் வங்கி ஊழியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்கவில்லை. தனியார் வங்கிகள் வழக்கம்போல் செயல்பட்டது குறிப்பிடதக்கது.
31-Dec-2025