பாங்க் ஆப் பரோடா 8,305வது கிளை துத்திப்பட்டில் துவக்கம்
புதுச்சேரி: பாங்க் ஆப் பரோடா வங்கிவின் துத்திப்பட்டு புதிய கிளை துவக்க விழா நடந்தது. பாங்க் ஆப் பரோடா வங்கியின் 8305வது கிளை மற்றும் புதுச்சேரி பிராந்தியத்தில், 47வது புதிய கிளை துவக்க விழா துத்திப்பட்டில் நேற்று முன்தினம் நடந்தது.இந்தியாவின் முன்னோடி வங்கியான பாங்க் ஆப் பரோடா,நகரங்கள் மற்றும் இன்றி கிராமங்களில் தனது கிளைகளை தொடர்ந்து விரிவுப்படுத்தி வருகிறது. சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கி தொழில் அபிவிருத்திக்கு கைகொடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி பிராந்தியத்தில், கிளை நிறுவப்பட்டுள்ளது. புதிய கிளையை பாங்க் ஆப் பரோடா சென்னை மண்டல தலைவர் சரவணகுமார் துவக்கி வைத்தார். தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது. புதுச்சேரி பிராந்திய தலைவர் ரவி வரவேற்றார். வங்கியின் பல்வேறு சேவைகளை துத்திப்பட்டு கிராம மக்கள் பயன்படுத்தி பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும் என கேட்டு கொண்டார். நிகழ்ச்சியில், சிறுகுறு தொழில் நிறுவன உரிமையாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். வங்கி துணை பிராந்திய தலைவர் பிரகாஷ் நன்றி கூறினார்.