உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அனுமதியின்றி பேனர் ஆணையர் புகார்

அனுமதியின்றி பேனர் ஆணையர் புகார்

அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் பகுதியில் அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.புதுச்சேரியில், அனுமதியின்றி பேனர்கள், கட் அவுட், தட்டிகள் வைப்பவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து அபராதம் விதித்து வருகின்றனர். கடலுார் மெயின் ரோடு, அரியாங்குப்பம் புறவழிச்சாலை, வீராம்பட்டினம் செல்லும் சந்திப்பு, பிரம்மன் சிலை அருகே உள்ளிட்ட முக்கிய சாலைகளில் பேனர்கள், கட் அவுட் வைப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.அரசியல் பிரமுகர்களின் பிறந்த நாள், கண்ணீர் அஞ்சலி, நினைவு அஞ்சலி பேனர்களை, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்தில் அனுமதியின்றி வைத்து வருகின்றனர். இந்த பேனர்களால் பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு வருவதாக, பொதுமக்கள், ஆணையரிடம் புகார் தெரிவித்தனர்.கொம்யூன் ஆணையர் ரமேஷ் புகாரின் பேரில், அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் மீது அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை