மேலும் செய்திகள்
அரூரில் சாரல் மழை
03-Jul-2025
புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று நள்ளிரவு திடீரென வீசிய சூறைக்காற்றால் பேனர்கள் விழுந்தது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெயில் சதம் அடித்து வந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக காலை முதல் வானம் மேகமூட்டத்துடனும், இரவில் லேசான மழை பெய்து வந்தது. நேற்று இரவு 9:00 மணியளவில் திடீரென வீசிய சூறைக்காற்றால் நகரப்பகுதியில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அறுந்து விழுந்தது. இதில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். புதுச்சேரி பஸ் நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த பேனர் திடீரென விழுந்ததில் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
03-Jul-2025