மேலும் செய்திகள்
அரியாங்குப்பத்தில் கார் மோதி பெயிண்டர் பலி
03-Aug-2025
அரியாங்குப்பம்: ஆற்று பாலத்தில் கார் மோதி, பைக்கில் சென்றவர் துாக்கி எரியப்பட்டு, இறந்த சம்பவத்தை அடுத்து போக்குவரத்து போலீசார் சாலை நடுவே பாரல்களை வைத்து பாதுகாப்பு ஏற்படுத்தினர். கடலுார் சாலை, நோணாங்குப்பம் ஆற்று பாலத்தில் நேற்று முன்தினம், புதுச்சேரி நோக்கி கார் வந்து கொண்டிருந்தது. முன்னே சென்ற வாகனத்தை கார் அதிவேகமாக முந்தி சென்ற போது, எதிரே வந்த பைக் மீது மோதியது. அதில், பைக்கில் சென்ற தனியார் பஸ் டிரைவர் துாக்கி எறியப்பட்டு, ஆற்றில் விழுந்து இறந்தார். மேலும், ஸ்கூட்டரில் வந்த பெண் ஒருவர் படுகாயமடைந்து, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கோர விபத்து, புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து, கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் (தெற்கு) கடலுார் சாலை, இடையார்பாளையம் பகுதியில் நேற்று சாலை நடுவே, இடைவெளி விட்டு, 30க்கும் மேற்பட்ட பாரல்களை வைத்து பாதுகாப்பு ஏற்படுத்தினர். மேலும், நோணாங்குப்பம் ஆற்று பாலத்தில் விபத்து ஏற்படுவதை தடுக்க, பொதுப்பணித்துறை மூலம் இலுமினேஷன் லைட் மற்றும் பாலத்தின் இரு புறங்களிலும், மின் விளக்குகளை அதிகப்படுத்தவும் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தன்வந்திரி தெரிவித்தார்.
03-Aug-2025