உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளி மைதானத்தில் அடிப்படை வசதிகள் தேவை

அரசு பள்ளி மைதானத்தில் அடிப்படை வசதிகள் தேவை

அரியாங்குப்பம்: அபிேஷகப்பாக்கம் சேத்திலால் அரசு துவக்க பள்ளி மைதானத்தில், அடிப்படை வசதியில்லாமல் இருப்பதால், விளையாட்டு பயிற்சி எடுக்க முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.தவளக்குப்பம் அடுத்த அபிேஷகப்பாக்கம் பகுதியில், சேத்திலால், அரசு துவக்க பள்ளி 1940ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பின், 1968ம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாகவும், 1980ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும் உயர்த்தப்பட்டது. பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.பள்ளி வளாகத்தில், 1 லட்சத்து 86 ஆயிரம் சதுர அடியில், விளையாட்டு மைதானம் உள்ளது. வாலிபால், டென்னிஸ் விளையாடுவதற்கான கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருக்கிறது. அதனால், மாணவர்கள் மைதானத்தில் பயிற்சி எடுக்க முடியாமல், அவர்களுக்கு விளையாட்டில் திறமை இருந்தும், போட்டிகளில் கலந்து கொள்ள முடியாமல் உள்ளனர்.போதிய வசதியில்லாமல் இருந்தும், 2023- 24ம் ஆண்டில், தேசிய அளவில் பள்ளிகளுக்கிடையே டில்லி, மத்தியபிரதேசம் ஆகிய இடங்களில் நடந்த கோ கோ., போட்டியில், 20 மாணவர்களும், மாநில அளவில், காரைக்கால், மாகி ஏனாம் ஆகிய இடங்களில் நடந்த போட்டியில், 40 மாணவர்களும் பங்கேற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.பள்ளி வளாத்தில் உள்ள சுற்றுச்சுவர் கிழக்கு பதியில் விழுந்துள்ளதால், அந்த வழியாக, மதுகுடிப்பவர்கள் பள்ளி வளாகத்தில் வருகின்றனர். மைதானத்தை சுற்றி, செடி, கொடிகள் முளைத்து கிடப்பதால், மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது.விளையாட்டு மைதானத்தில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தினால், இப்பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் நடக்கும் போட்டிகளில் சாதிப்பார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ