உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பி.டி.எஸ்., சிறப்பு ஸ்ட்ரே–2 சுற்று தகுதி பட்டியல் வெளியீடு

பி.டி.எஸ்., சிறப்பு ஸ்ட்ரே–2 சுற்று தகுதி பட்டியல் வெளியீடு

புதுச்சேரி: சென்டாக் இளநிலை நீட் பி.டி.எஸ். பட்டப்படிப்பு நிர்வாக ஒதுக்கீட்டிற்கான சிறப்பு ஸ்ட்ரே–2 சுற்று தகுதியான மாணவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ஸ்ட்ரே–2 சுற்றில் பி.டி.எஸ். படிப்பிற்கு விருப்பம் தெரிவித்து, பதிவுக் கட்டணம் செலுத்திய மாணவர்களின் விவரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மருத்துவக் கலந்தாய்வுக் குழுவின் வழிகாட்டுதலின்படி, சென்டாக் கலந்தாய்வின் 3ம் சுற்று அல்லது ஸ்ட்ரே சுற்று ஒதுக்கீடு பட்டியலில் இடம்பெற்ற சேர்ந்த மற்றும் சேராத அனைத்து மாணவர்களும் ஸ்ட்ரே சுற்று–-2 தகுதியான பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதேபோல், மருத்துவக் கலந்தாய்வுக் குழுவின் 3ம் சுற்றில் சேர்க்கை பெற்ற அனைத்து மாணவர்களும், அதன் ஸ்ட்ரே சுற்று அல்லது சிறப்பு ஸ்ட்ரே சுற்று ஒதுக்கீடு பட்டியலில் இடம்பெற்ற அனைத்து மாணவர்களும் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியல் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின், மாணவர்கள் தங்களது லாகின் டேஷ்போர்டில் உள்ள கிரீவன்ஸ் வாயிலாக இன்று 26ம் தேதி காலை 10 மணிக்குள் சமர்ப்பிக்கலாம். இது குறித்த எஸ்.எம்.எஸ்., மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.centacpuducherry.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது 0413-2655570, 2655571 ஆகிய உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என, சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி