உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடற்கரையில் துப்புரவு பணி

கடற்கரையில் துப்புரவு பணி

பாகூர்: சர்வதேச கடலோர துாய்மை தினத்தையொட்டி, பனித்திட்டு கடற்கரையில் துப்புறவு முகாம் நடந்தது.மா.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நடந்த முகாமில், ஒருங்கிணைப்பாளர் கிரிஜா தலைமை தாங்கினார். மீன்வளத்துறை இணை இயக்குனர் கவியரசன், சுற்றுப்புற சூழலுக்கு கடற்கரை துாய்மையின் அவசியம் பற்றி விளக்கினார்.சாகர்மாலா திட்ட கல்லுாரி மாணவர்கள், பனித்திட்டு உயர்நிலை பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் மற்றும் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன ஊழியர்கள் கடற்கரையில் 673 கிலோ குப்பைகளை சேகரித்து, துப்புரவு வாகனத்திடம் ஒப்படைத்தனர்.தலைமையாசிரியர் அமர்தேவ் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை லுார்துசாமி, சரவணன் ராமன், அகிலா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !