தேனீ வளர்ப்பு செய்முறை விளக்கம்
புதுச்சேரி: மணக்குள விநாயகர் வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்த செய்முறை விளக்கம், ஏரிப்பாக்கம் கிராமத்தில் நடந்தது. கல்லுாரி டீன் முகமது யாசின் தலைமை தாங்கினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ் கெலுஸ்கர், திட்ட அலுவலர் திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கல்லுாரி மாணவிகள் ஹேமபிரியா, இந்துமதி, இஷானி, ஜெயஸ்ரீ, காமேஸ்வரி, கமலேஷ்வரி, கவிப்பிரியா, காவியா, காவியாஞ்சலி, கயல்விழி, கீர்த்தனா ஆகியோர் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பின் பயன்கள், நன்மைகள் மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் ஏரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.